வடக்கு - கிழக்கு தழுவிய கதவடைப்புக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்த ரவிகரன் எம்பி
வடக்கு - கிழக்கு, தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக எதிர்வரும் நாளை இடம்பெறவுள்ள பூரண கதவடைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்ட (16.08.2025) அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதேவேளை இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திரமான வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் வேண்டுமென்ற எமது அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வதற்காக அனைவரும் இக்கதவடைப்புக்கு பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் நடவடிக்கை
மேலும், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த 07.08.2025அன்று, முத்துஐயன்கட்டு பகுதியிலுள்ள 63ஆவது இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி கோரும் முகமாக இலங்கை தமிழரசு கட்சியால் வடக்கு - கிழக்கு தழுவிய கதவடைப்புக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கைக்கு ஆதரவு தரக் கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
