கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் நடத்திய இராவணாயணம் காண்டம்
கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்ற ஏற்பாட்டில் இராவணாயணம் காண்டம் 01 நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்றது.
பல கலை கலாசார நிகழ்வுகள்
இதில் நூல் வெளியீடு, தனி நடனம், மெல்லிசை பாடல், குறும்பட வெளியீடு என பல கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
"இன்றைய தமிழ் சமூகம் தன் வரலாறுகளை மீட்டெடுப்பதற்கு துரிதமாக வலிமைப்பட வேண்டியது அரசியல் புலத்தை காட்டிலும் கவிப்புலத்திலேயே இல்லை" என்ற தலைப்பில் விவாத அரங்கும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராஜா, தொழிலதிபர் க.பாஸ்கரன், சிரேஷ்ட ஊடகர் ஐ.கஜமுகன் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








