தொடர்ந்து ஜப்பானை உலுக்கும் நிலநடுக்கம் : ஒரே வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள்
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 21 முதல்
தொடர்ச்சியான நில அதிர்வு அந்த மக்களிடையே கடுமையான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இன்றைய நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஜூன் 21 ஆம் திகதி தொடங்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜூன் 21 முதல் இந்தப் பகுதி சுமார் 1,582 நில அதிர்வு நிகழ்வுகளால் உலுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
