இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவு
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேற்கு ஜாவா மாகாணத்திலுள்ள பான்ஜார் நகருக்குத் தெற்குகே 18 கிலோமீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க பூகோளவியல் அளவையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுடையதாக பதிவாகியதாகவும் 118 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாகவும் இந்தோனேஷியாவின் பூகோள பௌதிகவியல் முகவரகம் தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும், சுனாமி ஆபத்து விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பட்ட 5.6 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 331 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri