இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நில நடுக்கம் - கிழக்கு மாகாணத்தில் அதிர்வுகள்
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வோல்கெனோ டிஸ்கவரி என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்தும், வோல்கெனோ டிஸ்கவரி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இந்த நில அதிர்வை உணரக்கூடிய பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், குறித்த பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
