மியன்மாரை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் :பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டும் அபாயம்
மியான்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது பத்தாயிரத்தைத் தாண்டும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மியான்மாரில் சமீபத்தில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 வலுவான அதிர்வுகளால்..
இந்நிலையில், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகும், நாடு 6 வலுவான பின்அதிர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மியான்மாரைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The death toll from the earthquake in Myanmar has exceeded 1,600, with more than 3,400 people injured.
— Victor vicktop55 commentary (@vick55top) March 29, 2025
This was reported by the Xinhua news agency. 139 people are still missing.
🟩 RT in Russian pic.twitter.com/xAeRIBv4u4
ஏற்கனவே இராணுவ ஆட்சியால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மியான்மார் மக்கள், நிலநடுக்கத்தால் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் மியான்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயிலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது,
மருத்துவமனைகளுக்கு வெளியே சிகிச்சை
நிலநடுக்கத்தின் போது மண்டலேயில் ஒரு பாலர் பாடசாலை இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளதுடன், 12 குழந்தைகள் மற்றும் அவர்களின் ஆசிரியரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் சிலர் நிலநடுக்க அபாயம் காரணமாக மருத்துவமனைகளுக்கு வெளியே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக சீன பேரிடர் நிவாரணக் குழு ஒன்று மியான்மாருக்கு வந்துள்ளது.
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் மியான்மாரை ஆதரிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |