இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இந்து சமுத்திரத்தின் சுமத்ரா தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்து சமுத்திரத்தின் சுமத்ரா தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் பெங்குலுவுக்கு அருகில் 212 கிமீ தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்களை எதிர்கால அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam