அதிகாலையில் டெல்லியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி, என்.சி.ஆர்(NCR) நகரில் இன்று அதிகாலை 5:36 மணியளவில் ஏற்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் டெல்லிக்கு அருகில் அமைந்திருந்ததுடன் 5 கிலோ மீட்டர் ஆழத்தில்,ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நில நடுக்கத்தின் அதிர்வு குடியிருப்பு பகுதிகளில் உணரக்கூடிய அளவில் சக்திவாய்ந்ததாக அமைந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் இதுவரை உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EQ of M: 4.0, On: 17/02/2025 05:36:55 IST, Lat: 28.59 N, Long: 77.16 E, Depth: 5 Km, Location: New Delhi, Delhi.
— National Center for Seismology (@NCS_Earthquake) February 17, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/yG6inf3UnK

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 16 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
