வங்கக்கடலில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு முறை பதிவான நிலநடுக்கம்!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய மிசோரம் மற்றும் கேம்ப்பெல் பகுதிகளில் முறையே, ரிக்டர் அளவில் 4.6 மற்றும் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரண்டு முறை நிலநடுக்கம்
கேம்ப்பெல் என்ற இடத்திலிருந்து 220 கிலோமீற்றர் தொலைவில் 32 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மிசோரமில் பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் நான்கு முறை நிலநடுக்கம்
Earthquake of Magnitude:4.6, Occurred on 10-04-2023, 02:26:02 IST, Lat: 8.98 & Long: 94.07, Depth: 32 Km ,Location: 220km N of Campbell Bay, Nicobar island, India for more information Download the BhooKamp App https://t.co/rbEJXZMrZL@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/O32Uq7cXfw
— National Center for Seismology (@NCS_Earthquake) April 9, 2023
மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று, ஒரே நாளில் நான்கு முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை நேற்று நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
Earthquake of Magnitude:4.7, Occurred on 10-04-2023, 06:16:40 IST, Lat: 23.16 & Long: 94.78, Depth: 10 Km ,Location: 151km ESE of Champhai, Mizoram, India for more information Download the BhooKamp App https://t.co/eRyJe1jP0w@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/71rl3X6M7r
— National Center for Seismology (@NCS_Earthquake) April 10, 2023