ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அண்டை நாடுகளிலும் தாக்கம்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று (19.02.2024) ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பரவலாக நில அதிர்வு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கிலோமீற்றர் தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri