ஆப்கான் நிலக்கடுக்கத்தில் 2000 பேர் பலி! கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிரிக்கெட் அணி வீரர் ரஷீத் கான் உலகக்கோப்பையில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரரின் அறிவிப்பு
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான ரஷீத் கான், உலகக்கோப்பையில் தனக்கு கிடைக்கும் முழு சம்பளத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஆப்கானிஸ்தான் மேற்கு மாகாணங்களை (Herat, Farah, Badghis) தாக்கிய நிலநடுக்கத்தின் துயரமான விளைவுகளை பற்றி நான் மிகுந்த சோகத்துடன் அறிந்துகொண்டேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது உலகக்கோப்பை போட்டிக் கட்டணம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை அழைக்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்' என தெரிவித்துள்ளார்.
சுமார் 2,000க்கும் அதிகமானோர் பலி
இதேவேளை சுமார் 2,000க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படும் நிலையில், இடிந்த கிராமங்களின் இடிபாடுகளுக்கு இடையில் உயிர் பிழைத்தவர்களுக்காக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
முன்னதாக, தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை மேற்கோள் காட்டி, '13 கிராமங்களில் 2,053 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1,240 பேர் காயமடைந்தனர். 1,320 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
