ஈரானில் பாரிய நிலநடுக்கம்: 7 பேர் உயிரிழப்பு ; 400க்கும் மேற்பட்டோர் காயம்
ஈரானின் கோய் நகரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாவும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம், அந்நாட்டு நேரப்படி நேற்று (28.01.2023) இரவு 23.44 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) தெரிவித்துள்ளது.
கோய் நகருக்கு தென்-தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்
ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தகவல் படி,
இந்த நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
ஈரானின் அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் இது உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கோய் என்பது ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள கோய் கவுண்டியின் ஒரு நகரம் மற்றும் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
