யாழில் மாணவியை கண்டித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கண்டித்த விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் பிழையான செயற்பாடு காரணமாக அவரை நல்வழிப்படுத்தும் வகையில் கண்டித்த ஆசிரியருக்கு எதிராக மாணவின் தாயாரால் பொலிஸில முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்று முன் தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டார்.
பிணை
இந்தநிலையில், குறித்த ஆசிரியரை நேற்றைய தினம் (28) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை பொலிஸார் முற்படுத்தியிருந்தனர்.
இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை குறித்த ஆசிரியரை ஒரு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
