தனது பதவி காலத்தை நீடிக்க ரணில் முயற்சி: தமிழர் தரப்பு குற்றச்சாட்டு
22ஆம் திருத்த சட்டத்தின் மூலம் தனது பதவி காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சி எடுப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு முன்னிலையில் கருத்துரைத்த அவர்,
"22ஆம் திருத்த சட்டத்திற்கு காரண கர்தாவே 21ஆம் சட்டம் தான். இந்த சட்டத்தில் 5 வருட நிறைவு என கூறப்பட்டாலும் சர்வஜன வாக்குரிமையை மேற்கொண்டு 6 வருடம் பதவியை நீடிக்கலாம் என சொல்லப்பட்டிருப்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா? இது வரை காலமும் இருந்த அனைவரும் 5 வருடங்கள் தான் பதவி வகித்திருக்கின்றார்கள்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி, இந்த 22ஆம் திருத்த சட்டத்தை கொண்டு வந்து தனது பதவி காலத்தை நீடிப்பதற்கு முயற்சி எடுப்பதாக தான் தெரிகின்றது” என கூறியுள்ளார்.
அதேவேளை, தற்போது இந்த திருத்த சட்டம் அவசியமா? என கேள்வி எழுப்பிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |