இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் 'ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கமைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் விமான பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் (Boarding Pass) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் விடுத்துள்ளது.
ஈ-போர்டிங் பாஸ்
புதிய நடைமுறையின் கீழ் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக, கையடக்க தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் குடிவரவு கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.

அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் மூலம் முத்திரை குத்தப்படுவதால் விமான பயணிகளுக்கு நேர விரயம் ஏற்படுவதுடன் தாமதங்களும் ஏற்படுகிறன.
இந்நிலையில் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறையால் அந்த குறைபாடு தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடியேற்ற முத்திரை
அதேவேளை பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அவற்றில் குடியேற்ற முத்திரை குத்தப்பட மாட்டாது.
இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.