கொள்ளை இலாபம் பெறும் சுங்க வரிச் சலுகை கடை உரிமையாளர்கள்
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களுக்கு சுங்க வரிச் சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடிய சுங்க வரிச் சலுகை கடைகளின் உரிமையாளர்கள் அதிகளவில் இலாபத்தை பெற்று வருவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுங்க வரிச் சலுகை கடைகளின் உரிமையாளர்கள் தமது கடைகளில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 80 முதல் 90 வீதம் என்ற மிகப் பெரிய இலாபத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த கடைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அரசயில் மிகப் பெரிய வரிச் சலுகைளை வழங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு வரிச் சலுகையில் பொருட்களை விற்பனை செய்வதற்காவே அரசாங்கம் இந்த சலுகையை வழங்கி வருகிறது.
இந்த கடைகளின் உரிமையாளர்கள் வரிச் சலுகையின் கீழ் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கின்ற போதிலும் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு சரியான முறையில் அந்த வரிச் சலுகையை வழங்குவதில்லை.
இதன் மூலம் அவர்கள் கூடுதல் இலாபத்தை பெற்று வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், சுங்க வரி சலுகை கடைகளில் விற்பனை செய்யப்படும் விலைகளை கண்காணிக்க நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பொறுப்பை வழங்க வேண்டும் என அரச கணக்காய்வு தெரிவுக்குழுவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
