இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு பிரித்தானியா பச்சைக்கொடி
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து ஆடைப் பொருட்களுக்கும் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படும் என்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதுவரை, தெற்காசிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைப் பொருட்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைத்திருந்தது.
மேலும் புதிய சலுகையின் கீழ், எந்தவொரு நாட்டிலிருந்தும் பெறப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைப் பொருட்களை அனுமதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தகத் திட்டம்
வளர்ந்துவரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த சலுகை, இலங்கைக்கு கூடுதல் வர்த்தக நன்மையை வழங்கும் என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த வரி நிவாரணம் இலங்கையின் ஆடைத் துறையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் கூறியுள்ளார்.



