புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கை வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க தீர்வை சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த சலுகை நடைமுறைக்கு வரும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அடிப்படையில் சுங்க தீர்வை சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகையை பல்வேறு வடிவங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
2400 முதல் 4799 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 600 டொலர் கூடுதல் சுங்க தீர்வையும்
4800 முதல் 7199 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 960 டொலர் கூடுதல் சுங்க தீர்வையும்
7200 முதல் 11,999 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 1440 டொலர் கூடுதல் சுங்க தீர்வையும்
12,000 முதல் 23,999 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 2400 டொலர் கூடுதல் சுங்க தீர்வையும்
24,000 அல்லது அதற்கு அதிகமான டொலர் அனுப்பிய தொழிலாளர்கள் 4,800 டொலர் சுங்க தீர்வை சலுகை பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.