நெதர்லாந்து கலாசார தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்
நெதர்லாந்தின் கலாசாரம் மற்றும் ஊடகத்துறைக்கான அரச செயலாளர் குணாய் உஸ்லு தலைமையிலான நெதர்லாந்து கலாசார தூதுக்குழுவினர் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
நெதர்லாந்தில் இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு திரும்பக் கொண்டுவரப்படும் கலாசார கலைப்பொருட்களின் உரிமையை மாற்றுவதற்கான சட்ட ஆவணத்தில் அவர்கள் கையெழுத்திட உள்ளனர்.
புகழ்பெற்ற இரண்டு சம்பிரதாய வாள்கள்
புகழ்பெற்ற இரண்டு சம்பிரதாய வாள்கள், சிங்களக் கத்திகள், மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த வரலாற்றுத் தருணத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளை நெதர்லாந்தின் அரச செயலாளர் எதிர்பார்க்கிறார்.
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் திகதி திங்கட்கிழமையன்று
இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் உரிமைக்கான
சட்டப்பூர்வ மாற்றம் கையொப்பமிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
