வெள்ளைபூண்டு மோசடி தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய துசான் அமெரிக்கா பயணம்
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய துசான் குணவர்தன அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளராக துசான் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பணி நிமித்தம் அமெரிக்கா செல்ல முற்பட்ட போது விமான நிலையத்தில் துசானை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டதால் அவர் இவ்வாறு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குறுகிய காலத்திற்குத் தாம் அமெரிக்கா பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளார் என தெரியவருகிறது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
