தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு குறித்த வழக்கிலிருந்து துமிந்த விடுதலை
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்றை வைத்திருந்தமை குறித்த வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
தங்கப்பூச்சு பூசப்பட்ட T-56 துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை இன்று (29) நீதிமன்றம் விடுவித்துள்ளது.
வழக்கு விசாரணை
நீதிமன்றம் இந்த தீர்ப்பை எடுத்ததற்கான முக்கியக் காரணமாக, குற்றச்சாட்டுகளை ஆதரிக்கக் கூடிய போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் துமிந்த திஸாநாயக்க கடந்த சில வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் துமிந்த திஸாநாயக்கவிற்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri