துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுயள்ளது.
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்
கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மே மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, சுகயீனம் காரணமாக மே மாதம் 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மே மாதம் 28ஆம் திகதி மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
