முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அதிரடி கைது!
முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி, கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
