ஏமாற்றப்பட்ட டலஸ் அழகப்பெரும! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
ஜனாதிபதி வாக்களிப்பில் பலர் டலஸ் அழகப்பெருமவினை நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் நிழல் அரசாங்கம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவின் நிழல் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இன்றும் உள்ளது.
அதனை பாதுகாக்கும் ஒருவராகவே தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் கோட்டாபயவினை அழைத்து அவருக்கு ஒரு இடத்தினை
வழங்கி மீண்டும் முடிசூட வைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.”என கூறியுள்ளார்.