கொரோனா அச்சம்! நாடாளுமன்ற அமர்வு நாட்கள் குறைக்கப்படலாம்? (photos)
கொரோனா தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமர்வுகள் குறித்து முடிவெடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூடவுள்ளது.
நாளையதினம் அந்த குழு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற அமர்களின் நாட்கள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 18 ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் சம்பிரதாய அமர்வுக்குப் பின்னர் 50 முதல் 60 நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக கடந்த வாரம், சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தொற்றுக்கு உள்ளானார்.
காலிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 40 உணவு விநியோக ஊழியர்களில் 20 பேருக்கு தொற்று உறுதிச்செய்யப்பட்டது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் விரைவான என்டிஜென் சோதனைகள் நடத்தப்பட உள்ளன
இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொற்றில் இருந்து விடுபட்டு விட்டாரா என்பதை அறிந்துக்கொள்வதற்காக நாளையதினம் அவருக்கு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே சபாநாயகர் இல்லாத நிலையில், பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நாளை அலுவல் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.



