யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை (04.03.2024) இடம்பெற்றுள்ளது.
மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மரண விசாரணை
இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
