பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பு
பண்டாரகம பகுதியில், 'டுபாய் சுத்தா' என்றழைக்கப்படும் பெரும் அளவிலான போதைப்பொருள் விற்பனையின் பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேக நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் பொதி செய்யப்படும் இடமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குழுவினர்
இதன்போது 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் பைகள், 4 கையடக்கத் தொலைபேசிகள், கார் ஒன்று மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பண்டாரகம, வெல்மில்ல அலோத்தியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குழுவினர் தங்கியிருப்பதாக பண்டாரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri