வெளிநாட்டவர்களுக்குத் துபாய் அரசு அறிவித்துள்ள மகிழ்ச்சியான தகவல்
துபாய் அரச நிறுவனங்களில் பணிப் புரிய விரும்பும் வெளிநாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, துபாய் - உள்ளூர் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், திறமையான மற்றும் திறமையற்றவர்கள் எனக் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், துபாயின் வீதிகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் கல்வித்துறை, சுகாதார நிறுவனம், துபாய் மகளிர் நிறுவனம், நிதித் துறை, முகமது பின் ரஷீத் அரசுப் பாடசாலை மற்றும் பிற அரசு நிறுவனங்கள் பல்வேறு வெற்றிடங்களை நிரப்பவுள்ளதாக விளம்பரம் செய்துள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வேலைகளில் பெரும்பாலானவை தொழில் வல்லுநர்கள் மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அதுபோல, சில பொது நிறுவனங்கள் பதவியின் தன்மையைப் பொறுத்து 10,000 திர்ஹம் (இலங்கை மதிப்பில் சுமார் 9385,261ரூபா) முதல் 50,000 திர்ஹம் ( இலங்கை மதிப்பில் சுமார் 46,926,307 ரூபா) வரை சம்பளம் வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய நபர்கள் மற்றும் அனைத்து நாட்டினரும் அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு போரிடல் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
