துபாயில் தீ விபத்தில் சிக்கி பலியான தம்பதியினர் குறித்து வெளியான புதிய தகவல்
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உள்ளடங்களாக 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்த கேரள தம்பதி, இஸ்லாமிய அண்டை வீட்டி நண்பர்களுக்காக இப்தார் விருந்து தயாரித்துக் கொண்டிருந்ததாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
துபாயில் உயிரிழந்த கேரள தம்பதி குறித்து வெளியான தகவல்
மேலும் கேரளாவினை சேர்ந்த தம்பதியினரான மலப்புரத்தைச் சேர்ந்த வெங்கரா ரிஜேஷ் (வயது 38) மற்றும் அவரது மனைவி ஜெஷி (32) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் நோன்பு துறக்கும் நேரத்தில், தங்கள் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இப்தார் விருந்து கொடுப்பதற்காக வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய உணவை தயார் செய்து வந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கு, மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.