இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்ற கதவு மூடப்பட்டமை குறித்து மகிழ்ச்சி
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்ற கதவு மூடப்பட்டமை குறித்து பெரு மகிழ்ச்சி அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி வழங்கிய போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்பொழுது அந்தக் சட்டம் நிறைவேற்றப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதனால் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்க அனுமதியில்லை எனவும் அது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச அமெரிக்க – இலங்கை குடியுரிமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
