எதிர்வரும் சிறு போகத்தில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டி.எஸ்.பி உரம் விநியோகிக்கப்படும்
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான டி.எஸ்.பி உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று முன்தினம்(13.02.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி விற்பனையில் உள்ள சிக்கல்கள்
இக்கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பயிர் மஞ்சளாகும் நோயைத் தடுப்பது, உரமிடுதல் உத்திகள் மற்றும் அரிசி விற்பனையில் உள்ள சிக்கல்கள் குறித்தும் இதன் போது ஆரயப்பட்டது.
விவசாயிகள் டி.எஸ்.பி உரங்களை பயன்படுத்துவதை குறைத்தமையே பயிர் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் என விவசாய திணைக்களம் கண்டறிந்துள்ளதுடன், எதிர்வரும் சிறு போகத்தில் இந்நோய் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
