பொலிஸாரின் தலையீட்டினால் கடமையிலிருந்து விலகிய பிரதேச செயலக அதிகாரிகள் (Video)

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Rusath Jul 26, 2022 09:33 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்னெருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (25) எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப விநியோக அட்டையின் பிரகாரம், அதிகாரிகள் பதிவு செய்ததன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நிருணயிக்கப்பட்டுள்ளபடி, மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்களுக்கு 7000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் தலையீடு

குடும்ப அட்டையின் பிரகாரம் சுமுகமாக எரிபொருள் வழங்கப்பட்டு கொண்டிருந்தபோது இடைநடுவே பொலிஸார் தலையீடு செய்துள்ளனர்.

இதன் காரணமாக மேற்குறித்த நடைமுறையின்கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியாமல் போயுள்ளது.

இதேவேளை, அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினரால் அரச உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்ட காரணத்தினால் கடமையிலிருந்து இடைநடுவே வெளியேறியதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தலையீட்டினால் கடமையிலிருந்து விலகிய பிரதேச செயலக அதிகாரிகள் (Video) | Ds Officers Off Duty Due To Police Intervention

எரிபொருள் யாவருக்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தூர இடங்களிலிருந்து வருபவர்கள் குடும்ப அட்டை வைத்திருக்கமாட்டார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கும் எரிபொருள் வழங்க வேண்டும். எனவே, தாம் அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்குவதற்குரிய கடமைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தலையீட்டினால் கடமையிலிருந்து விலகிய பிரதேச செயலக அதிகாரிகள் (Video) | Ds Officers Off Duty Due To Police Intervention

மக்கள் முறைப்பாடு

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைக்கமைய எரிபொருள் வழங்கும் செயற்பாடுகளுக்கு மாறாக, சிலர் செல்வாக்கை பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்கின்றனர்.

பொலிஸாரின் தலையீட்டினால் கடமையிலிருந்து விலகிய பிரதேச செயலக அதிகாரிகள் (Video) | Ds Officers Off Duty Due To Police Intervention

இதுபோன்ற செயல்களினால், நாள் கணக்கில் காத்திருக்கும் மக்கள் எரிபொருளின்றி திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் QR குறியீடு அடிப்படையில் அனைவருக்கும் சீரான முறையில் எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US