திருகோணமலையில் கடற்படையினருக்குள் கடும் மோதல் - ஒருவர் படுகொலை
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் 2 கடற்படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு சிப்பாய் மற்றைய சிப்பாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கந்தேகெதர மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று காலை திருகோணமலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையினர் மோதல்
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் நான்கு கடற்படையினர் தங்களுடைய விடுதியில் ஒன்றாக மதுபானம் அருந்தியதாகவும், அதற்கு முன்னதாக நால்வரில் இருவர் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
மற்ற இரண்டு கடற்படை வீரர்களுக்கு இடையே குடிபோதையில் மோதல் ஏற்பட்டு இறுதியில் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் கைது
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை இம்புல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்