கொடிகாவத்தையில் கைப்பற்றப்பட்ட எண்பது கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்
கொழும்பை அண்மித்த கொடிகாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து எண்பது கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாவத்தை, நாகஹமுல்ல பிரதேச வீடொன்றில் போதைப் பொருள் வர்த்தகம் நடைபெறுவதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பொலிசாரினால் கைது
அதனையடுத்து குறித்த வீட்டைச் சோதனையிட்டபோதே அங்கிருந்து 13 கிலோ 372 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வீட்டினுள் 13 பொதிகளில் ஹெரோயின் மற்றும் இரண்டு பொதிகளில் ஐஸ் போதைப் பொருள் என்பன பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 27 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri
