வெள்ளவத்தையில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! வெளிநாட்டிலுள்ள ஆபத்தான நபர்
கொழும்பு, பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான 'வெலியோய பிரியந்த' மற்றும் 'SF ஜகத்' ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரிடமிருந்தே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் மீட்பு
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே இந்த ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய உபகரணங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர்.

இதன்போது 3 கோடி ரூபாவுக்கு அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 2 தராசுகள், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri