கெஸ்பேவ பிரதேசத்தில் சிக்கிய ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
கெஸ்பேவ பிரதேசத்தில் சுமார் ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொகையொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை பொலிஸாரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 19 வயது இளைஞர் ஒருவர் போதைமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் அடிப்படையில் கெஸ்பேவ, சித்தமுல்லை பிரதேசத்தில் போதைமருந்து விற்பனை செய்யும் இரகசிய இடமொன்று தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
அதனையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டபோது, அங்கிருந்த இரண்டு நபர்கள் சாமர்த்தியமாக தப்பி ஓடியுள்ளனர்.
பொலிஸாரின் சோதனையில் அந்த வீட்டில் இருந்து ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியைக் கொண்ட ஆறு கிலோ போதை மருந்து மற்றும் ஒன்பது மில்லி மீட்டர் கைத்துப்பாக்கிக்குப் பயன்படும் பத்தொன்பது ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தங்காலை பொலிஸாரின் தகவலுக்கு அமைய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவும் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யவும் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது