கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்: காரணத்தை வெளியிட்டுள்ள பொலிஸார்
கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனைகளால் அதிகளவான குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவுக்கு பொறுப்பாக உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு
எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (02-02-2024) வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 2023ஆம் ஆண்டில் குடும்ப வன்முறைகள் சம்பந்தமாக 863 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை
இவற்றுள், 166 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்திலேயே பேசித் தீர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வன்முறைகளின் பின்னணியில் போதைப்பொருள் பாவனையே காணப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
