யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை : தொடரும் பொலிஸாரின் கைது நடவடிக்கை (Photos)
கொக்குவில் நந்தாவில் பகுதியிலும் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு நாட்களில் 15 பேர் கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரை என்பவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்
கைது செய்யப்பட்ட 15 பேரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த 15 பேரில் ஆறு பேர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
37 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் இன்றையதினம் (20) கைதுசெய்யப்பட்டார். 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 23,000 ரூபா பணமும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர்
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டநிலையில் குறித்த நபரை நாளை(20) வரை பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதித்து பருத்தித்துறை
நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
