போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறதா..! உள நல வைத்தியர் பதில்

Kilinochchi Hospitals in Sri Lanka Drugs
By Sudaron May 19, 2023 09:48 AM GMT
Report

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வு தவறானது என்று பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது எனக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உள நல வைத்தியர் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்றைய தினம் (18.05.2023) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் உளவளத்துணை மற்றும் உளவளத்துணை சார்ந்து பணிபுரிவோருடனான கலந்துரையாடலில் கருத்துகள் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைவஸ்த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்மபுரம் பகுதியில் 14 நாட்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டுவருகின்றது.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறதா..! உள நல வைத்தியர் பதில் | Drugs In Sri Lanka

ஒரு வருட ஆய்வு 

இவ்வாறு புனர்வாழ்வு பெற்றவர்கள் தொடர்பில் நாம் தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றோம். புனர்வாழ்வு அழிக்கப்பட்ட பலர் சமூகத்துடன் இணைந்து ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர்.

புனர்வாழ்வு பெற்றவர்களில் 10 பேர் தொடர்பாக ஒருவருட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் மூவர் மது அருந்தாமலும், நால்வர் முன்பா விடக்குறைந்தளவு மது அருந்துபவர்களாகவும், இருவர் முன்பைவிட அதிகளவு மது அருந்துபவர்களாகவும் மேலும் ஒருவர் இயற்கை எய்தியவராகவோ அல்லது தகவல் பெற முடியாதவராகவோ உள்ளார்.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறதா..! உள நல வைத்தியர் பதில் | Drugs In Sri Lanka

நல்வழிப்படுத்துவதற்கான செயற்பாடுகள்

சமூகத்தில் புனர்வாழ்வு பெற்றுத் திருந்தி வாழ்வோர் தொடர்பான தகவலை விடவும் புனர்வாழ்வு பெற்றவர்கள் அதிகம் குடிக்கின்றார்கள், இறக்கின்றார்கள் போன்ற தகவலே வேகமாகப் பரவிக்காணப்படுகின்றது. 

இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வு பெறுவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

எம்மிடமிருக்கும் வளங்களை கொண்டு போதைபொருள் பாவனைகளால் பாதிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்துவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றோம் என்று உளநல வைத்திய அதிகாரி ஜெயராஜா தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US