கம்பஹா பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள்: ஆயுர்வேத வைத்தியர் கைது!
கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கம்பஹா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது 6,000 போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர், முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் (டிசம்பர் 05) கம்பஹா, புத்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்த பெண் ஏழு ஐஸ் பொதிகள் மற்றும் 38 மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக மூன்றாம் தரப்பினர் போதைப்பொருளை சிற்றுண்டிச்சாலையில் வைத்துள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ருக்மல்கம்வில பகுதியில் உள்ள சிறுவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமொன்றை பொலிஸார் சோதனையிட்டனர், இதன் போது ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியராகக் காட்டிக் கொண்டதாகக் கருதப்படும் கைதானவர், கைது செய்யப்பட்ட போது அவரிடம் 6,576 போதை மாத்திரைகள் மற்றும் 5,500,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பஹாவில் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைமாத்திரையுடன் பெண் கைது |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
