போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியாவில் புனர்வாழ்வு பெற்றவர் மரணம்
போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகிய நிலையில் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியால் அவரது சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதிக ஐஸ் போதைப் பொருள் உட்கொண்டமையால் நுரையீரல் மற்றும் உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணமேற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவரது சடலம் குடும்பஸ்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
