போதைப்பொருள் வியாபாரியை கைது செய்த பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு
நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று கைதாகியுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணை
பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் சிறிது காலமாக ஈசி பண பரிமாற்றம் மூலம் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைதான சந்தேகநபர் வசம் இருந்து 3.5 கிராம் ஹெரோயின், 2.1 கிராம் ஐஸ் போதைப்பொருள், கைத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்ட போதைப்பொருள்
மேலும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசேல கே.ஹேரத் கூறுகையில், கைதான சந்தேகநபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமான முறையில் பொதி செய்து விற்பனை செய்துள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவராவார் என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
