வெளிநாட்டிலிருந்து அஞ்சல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.
சீதுவை பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருட்கள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்காவின் குவாட்டமாலா மாநிலத்தில் இருந்து பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விவசாயி ஒருவரின் பெயருக்கு இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பொதி அனுப்பப்பட்டுள்ளது.
பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்பு
குறித்த பொதியில் இருந்து மூன்று கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் மற்றும் மெதெம்பெட்மைன் ஆகிய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொதியினைபெற்றுக்கொள்ள வந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |