கைதான அதிபருக்கு எதிராக கல்வித் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பேலியகொடை நகர சபை உறுப்பினரின் கணவர், எப்பாவலவில் பாடசாலை அதிபராகப் பணியாற்றி, அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
சேவையிலிருந்து இடைநீக்கம்
வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்பி, அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் ஸ்தாபன விதிக் கோவையின் விதிகளின் கீழ் வரும் குற்றத்தை அவர் செய்துள்ளதால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, அவர் உடனடியாக சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவரின் கணவரான குறித்த அதிபர், சமீபத்தில் 1 கிலோ 118 கிராம் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |