யாழில் போதைப்பொருள் கலந்த பாக்கு விற்றபனை:ஒருவர் கைது(Photo)
யாழ் கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோபாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
விசேட குற்றத் தடுப்பு பிரிவினரின் நடவடிக்கை
இந்நிலையில் குறித்த பகுதியை நோட்டமிட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவினர் போதைப்பொருள் கலந்த பாக்குடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் 750 கிராம் போதை கலந்த பாக்கு காணப்பட்டதுடன் அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
