வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக பரவும் போதைப்பாவனை! விசாரணை ஆரம்பம் (photo)

Vavuniya Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Schools
By Rakesh Oct 25, 2022 08:26 PM GMT
Report

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வவுனியா மாவட்டத்தில் நகரை அண்டிய சில பாடசாலைகளில் சில மாணவர்கள் மற்றும் சில மாணவிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுகின்றனர் என்று எமக்குத் தனிப்பட்ட ரீதியிலும், பொலிஸார் ஊடாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு ஏற்ப அவர்களை அதில் இருந்து விடுபடச் செய்வதற்கான நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக பரவும் போதைப்பாவனை! விசாரணை ஆரம்பம் (photo) | Drug Use Vavniya Students

இன்னும் பல பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதாகவும், அதனை தமது சக மாணவ, மாணவிகளிடம் கைமாற்றுவதாகவும் தகவல் கிடைத்துள்ள போதும் சில பாடசாலைகள் தமது பாடசாலையின் பெயரைக் கருத்தில் கொண்டு அதனை வெளிக்கொண்டு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.

மாலை வேளைகளில் வவுனியா வைரவப்புளிங்குளம், பூங்கா வீதி, குடியிருப்பு, குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வெளிப் பகுதிகளைச் சேர்ந்த இளம் சமூகத்தினர் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பிலும் அவர்களது நடத்தைகள், அவர்களது நண்பர்கள், அவர்கள் சென்று வரும் இடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் மாணவ சமூகத்தின் மீது அக்கறையுடன் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் பாடசாலைகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கில் யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விபரித விளைவுகள் குறித்து நாம் தினமும் அறிந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் இந்த நிலை அதிகரித்து வருகின்றது.

இதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்" - என்றார்.

இதேவேளை, வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் மருத்துவ நிலையம் ஊடாக மாதாந்தம் 400 பெட்டி போதை மாத்திரைகளை கொள்வனவு செய்து வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன்

வவுனியாவில் போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்தார் என்று கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவிலும் போதை மாத்திரைகள் தனியார் வைத்தியசாலை ஒன்றின் பெயரில் அரச வைத்தியர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக பரவும் போதைப்பாவனை! விசாரணை ஆரம்பம் (photo) | Drug Use Vavniya Students

"யாழ்ப்பாணத்தில் மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எமக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. குறித்த தகவல் வெளியாகியதை அடுத்து விடுமுறை நாட்களாக இருந்தமையால், தற்போது உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது பிரந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் இணைந்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வைத்தியசாலை, வைத்தியர் மற்றும் அவரிடம் இருந்து குறித்த போதை மாத்திரைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த போதை மாத்திரை கொள்வனவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமையால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இரண்டு மாவட்டங்களையும் உள்ளக்கி விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது. விசாரணைகள் நிறைவடைந்த பின் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" - என்றார்.



10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US