பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக, இது ஒரு பேனாவை போல தோற்றம் கொண்டிருந்தாலும், அதை ஆராயும் போது அதில் போதைப்பொருள் சிகரெட் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் கோரிக்கை
இந்த போதைப்பொருள் பாவனையானது தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
