இராணுவ பாதுகாப்பு அதிகம் உள்ள வடக்கில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கேள்வி
பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் அரச பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்று வருகின்றது என தமிழ் அரசியல் கட்சி ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனையினால் நோய்வாய்ப்பட்ட சுமார் 140 பேர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளுர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ள தனது 15 வயது மகன் தனக்கு வேண்டாம் என சுன்னாகத்தில் உள்ள தாய் ஒருவர் பொலிஸாருக்கு கடிதம் எழுதியதையடுத்து, சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அச்சுவேலி புனர்வாழ்வு பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல்
“பத்து பேருக்கு ஒரு வீரர் என வடக்கில் பெரும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல் மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருகின்றது. இராணுவமும், பொலிஸ் புலனாய்வு அமைப்புகளும் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இந்த போதைப்பொருள் எவ்வாறு வருகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண இளைஞர் சமூகத்தை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு கூட மக்கள் அச்சப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“யாராவது தகவல் கொடுத்தால், கடத்தல்காரர்களுக்கு அதைச் செய்தது யார் என்ற தகவல் மிக விரைவாகக் கிடைக்கிறது. அது எப்படி இடம்பெறுகிறது என எங்களுக்குத் தெரியாது. இந்த விடயத்தில் பொலிஸாரும் இராணுவ புலனாய்வு அமைப்புகளும் உரிய கவனம் செலுத்தாதது ஏன்” என சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெருமளவு பணம் கொடுத்து போதைப்பொருள் வாங்கும் இளைஞர்கள்
போதைக்கு அடிமையான இளைஞர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொடுத்து அவற்றை வாங்க ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் திருட்டு, கொள்ளைகள் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் விநியோகம், விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக வழங்கப்படும்
தண்டனைகள் தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்படுமானால்,
இளைஞர்களை ஓரளவுக்கு இந்த அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற முடியும் என
ஈபிஆர்எல்எப் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
