நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்
இலங்கையின் முக்கியமான போதைப்பொருள் வர்த்தகர்கள் பலரும் அண்மைக்காலமாக நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
யுக்திய மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்படவிருந்த பலரும் இவ்வாறு தப்பி ஓடியுள்ளனர்.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர்கள்
விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இவர்களின் பெயர் மற்றும் வசிப்பிடம் தொடர்பிலான பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர்கள் கைது செய்யப்படவுள்ள விபரம் பொலிஸ் திணைக்களத்திற்கு உள்ளிருந்தே போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வழங்கப்படுவதன் காரணமாக அவர்கள், தம்மைக் கைது செய்ய பொலிஸார் தேடிவர முன்னரே நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன் இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் துபாய் போன்ற பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக்கும்பல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |