வெளிநாட்டில் பதுங்கியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்! பெருந்தொகை பணத்துடன் சிக்கிய உறவினர்
கல்கிசை, சொய்சாபுர பகுதியில் 800,000 ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரிடமிருந்து 44,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்க தேவப்ரிய பீரிஸின் மைத்துனர் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேற்குறித்த தேவப்ரியவின் சார்பாக இலங்கையில் போதைப்பொருள் விநியோகித்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ரத்மலானையில் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.